[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஒலிம்பிக் நாயகன் பெல்ப்ஸ்... சாதனைகள் சாத்தியமானது எப்படி?

rio-olympics-michael-phelps

ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கங்களை வென்றதுடன் 25 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். இந்த அசாத்திய சாதனைகளுக்கு பெல்ப்ஸ்சின் உடல் அமைப்பு பட்டர்பிளை நீச்சலுக்கு ஏற்ற வகையில் இயற்கையாகவே அமைந்திருப்பதே காரணம் என்கிறார்கள் வல்லுனர்கள்.

பட்டர்பிளை போட்டியில் நீச்சல் குளத்தில் குதித்த பிறகு சிறிது தொலைவுக்கு கால்களை மட்டுமே அசைத்து முன்னேற வேண்டும். சுவரைத் தொட்டுத் திரும்பும் போதும், இதே உத்தி பயன்படும். இதற்குப் பெயர் டால்பின் கிக். கால்களை உதைத்து அதன் மூலம் முன்னேறும் இந்த உத்தியின் மூலம் 90 சதவிகித உந்துவிசை கிடைக்கிறது. மைக்கேல் பெல்ப்ஸைப் பொறுத்தவரை, அவரது கணுக்கால் பெரும்பாலான நீச்சல் வீரர்களைக் காட்டிலும் 15 டிகிரி அளவுக்கு கூடுதலாக வளைந்திருக்கிறது. இதனால் கால்கள் துடுப்புகள் போலச் செயல்பட்டு உடலை உந்தித் தள்ளுகின்றன. எதிராளிகளைவிட அதிகமான ஆற்றலும் கிடைக்கிறது.

கைகளைப் பயன்படுத்துவதிலும் பெல்ப்ஸ் மற்ற வீரர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். பெல்ப்ஸ் தனது முழங்கைகளைக் கொண்டு கீழ்நோக்கி நீரைத் தள்ளி, பின்னோக்கிக் கைகளை இழுத்து உடலை முன்னோக்கிச் செலுத்துகிறார். கிட்டதட்ட படகுகளிலும் கப்பல்களிலும் பயன்படும் உந்துவிசை மோட்டார் போல கைகளைச் சுழற்றுவதில் பெல்ப்ஸ் வல்லவர். இதனால் அதிவேகமாக இலக்கை நோக்கி அவரால் முன்னேற முடிகிறது.

பெரும்பாலான நீச்சல்வீரர்களைக் காட்டிலும் பெல்ப்ஸின் உடல் அமைப்பு சற்று மாறுபட்டிருக்கிறது. பெல்ப்ஸ் 6 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். மற்ற வீரர்களைக் காட்டிலும் நீண்ட கைகளைக் கொண்டவர். கைகள் விரிந்த நிலையில் அவரது உடல் அகலம் 6 அடி 7 அங்குலம். இது நீருக்குள் கூடுதல் ஆற்றலைப் பெற உதவுகிறது. ஒப்பீட்டளவில் கால்களைவிட, கழுத்துக்கும், வயிற்றுக்கும் இடையேயான உடலின் உயரம் சற்று அதிகமாக இருக்கிறது. இதனால் மற்றவர்களை விட மிக விரைவாக இலக்கைத் தொட்டுவிட முடிகிறது. இந்த உடல் அமைப்பு காரணமாக ஒவ்வொரு முறை சுவரைத் தொட்டுத் திரும்பும்போதும், சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு கூடுதல் தொலைவை பெல்ப்ஸ் கடந்து விடுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close