நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல் நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில் இப்போது பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் இன்று காலை தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸும் சிப்ளேவும் களமிறங்கினர். சிப்ளே 22 ரன்களிலும் பர்ன்ஸ் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டென்லி நிலைத்து நின்று ஆடினார். கேப்டன் ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டென்லி 74 ரன்கள் எடுத்து டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்ததும் பென் ஸ்டோக்ஸ் வந்தார். அவரும் போப்பும் நிதானமாக ஆடி வருகின்றனர்.
இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 67 ரன்களுட னும் போப் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளும் டிம் சவுதி, நீல் வாக்னர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்