[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

“கோலிதான் எனக்கு கடவுள்” - வெறித்தனமான டேட்டூ ரசிகர்

virat-kohli-meets-his-tattoo-fan-pinto-behra

உடல் முழுவதும் தன்னுடைய உருவத்தை பச்சை குத்திய ரசிகருடன் கேப்டன் விராட் கோலி ஆசையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

ஒடிசாவின் பெஹ்ரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிண்டோ பெஹ்ரா. இவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்கள். உடலின் பல பகுதிகளில் விராட் கோலியின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். இந்திய அணி விளையாடும் போட்டிகளில் பச்சை குத்திய உடலினை காட்டியவாறு மைதானத்தில் வலம் வருவார்.

                  

இந்நிலையில், தன்னுடைய உருவத்தை பச்சை குத்திய ரசிகர் பிண்டோவை விராட் கோலி சந்தித்துள்ளார். டேட்டூ ரசிகருடன் விராட் ஆசையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, விராட் கோலியின் நெஞ்சில் அந்த ரசிகர் மகிழ்ச்சியில் முத்தமிட்டார்.  

            

பிண்டோ 2016 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய உடலில் பச்சை குத்த ஆரம்பித்தார். விராட் கோலியின் உருவம்தான் முதல் பச்சை. பில்டிங் காண்டிராக்டர் ஆக பணி புரியும் இவர் விராட் கோலி தனக்கு கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார். நெஞ்சில் விராட் கோலியின் உருவத்தை பச்சைக் குத்தியுள்ள அவர், முதுகில் அவரது ஜெர்ஸி எண் 18-ஐ பச்சை குத்தியுள்ளார். அடுத்ததாக விராட் கோலியின் நூறாவது சதம் பதிவு செய்யப்படும் போது பச்சைக் குத்த உள்ளதாக கூறியுள்ளார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close