[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

முதல் வெற்றியை ருசிக்க போவது யார் ? இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது டி20

india-vs-south-africa-2nd-t20i-will-play-today

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்தப் பயணத்தில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் அந்த அணி விளையாடவுள்ளது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 15ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த போட்டியில் மழை சொதப்பிய நிலையில், இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு எதுவும் இருக்காது என கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. முதல் போட்டி ரத்தான நிலையில் இன்றைய போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close