[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை போராடி வென்ற நடால் 

nadal-wins-us-open-4th-championship

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ரஷ்ய வீரர் மெத்வதேவ் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில் 7-5,6-3,5-7,4-6,6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவ்வை போராடி ரஃபேல் நடால் வீழ்த்தினார். இதன்மூலம் ரஃபேல் நடால் தனது 19 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். மேலும் இது நடாலின் 4ஆவது அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமாகும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close