[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர் யார் ? இர்பான் பதான் கருத்து

irfan-pathan-names-the-most-important-cricketer-of-indian-team

இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான கிரிக்கெட் வீரர் யார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்திய கிரிக்கெட் அணிக்கு பும்ரா தான் மிகவும் முக்கியமான பந்துவீச்சாளர். அவர் அணியில் விளையாடவில்லை என்றால் அது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மிகவும் பாதிக்கும். அந்த அளவிற்கு பும்ரா அணிக்கு முக்கியமானவர். இவர் ஒருநாள்,டெஸ்ட், டி20ஆகிய மூன்று வகையான போட்டிகளிலுமே சிறந்து விளங்கும் ஆற்றலை பெறக்கூடியவர்.

சில பந்துவீச்சாளர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்வில் முழுவதிலும் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த மாட்டார்கள். ஆகவே ஒரு பந்துவீச்சாளர் தனது கிரிக்கெட் வாழ்வில் ஹாட்ரிக் சாதனைப் படைத்தால் அவர் மற்றவர்களைவிட அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார் என்பது அர்த்தம். தற்போது பும்ரா எடுத்திருக்கும் ஹாட்ரிக் கடைசியானது அல்ல. அவர் மேலும் பல முறை ஹாட்ரிக் எடுக்கும் திறமை உடையவர்” எனத் தெரிவித்துள்ளார். 

பும்ராவிற்கு முன்பாக கடந்த 2006ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இந்தியா சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதலில் ஹாட்ரிக் சாதனைப் படைத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர் பதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close