[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

புற்றுநோயால் உயிரிழந்த கால்பந்து வீரரின் 9 வயது மகள் - உருகிய நட்சத்திரங்கள்

spain-offers-condolences-to-luis-enrique-after-tragic-death-of-daughter-xana-you-have-us-by-your-side-forever

முன்னாள் கால்பந்து வீரரின் மகள் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் லுயிஸ் என்ரிகியு தன்னுடைய மகள் இறந்துவிட்டதாக கடந்த வியாழக்கிழமை ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், “எலும்பு புற்றுநோயுடன் 5 மாதங்கள் போராடிய எங்களுடைய 9 வயது மகள் ஸனா உயிரிழந்துவிட்டாள். ஸனாவின் இந்தப் போராட்ட காலத்தில் அவள் மீது அக்கறை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.

           

சிறுமி ஸனாவின் மறைவு கால்பந்தாட்ட உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.

         

        

அதேபோல், கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் உள்ளிட்ட நட்சத்திர விளையாட்டு வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள். #RIPXana ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    

ஸனா கல்பந்து மைதானத்தில் தனது தந்தையுடன் துள்ளி விளையாடிய காட்சிகளை பலரும் அதில் பதிவிட்டு வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close