[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

39 பந்தில் சதம், 4 ஓவரில் 8 விக்கெட்: கிருஷ்ணப்பா கவுதம் ’ஆஹா’ சாதனை

k-gowtham-smashes-t20-records-with-unbelievable-all-round-figures

கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கவுதம், 39 பந்தில் சதம் அடித்ததோடு, 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி-20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார்.

கர்நாடக பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட், இப்போது நடந்து வருகிறது. இதில், பல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடு கிறார் கிருஷ்ணப்பா கவுதம். இந்த அணி ஷிவமோகா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் மோதியது. பேட்டிங்கில் களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக விளையாடி 39 பந்தில் சதம் அடித்தார். பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமாக மட்டுமே 106 ரன்களை சேர்த்த அவர், 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். 

பின்னர் பீல்டிங் செய்யும் போது, 4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். இது டி20 தொடரில் சாதனை. இங்கிலாந்தின் காலின் ஆக்கர்மன் 7 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் கவுதம். இருந்தாலும் இதற்கு ஐசிசி -ஐ அங்கீகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை அடுத்து கவுதமுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தச் சாதனை குறித்து கவுதமிடம் கேட்டபோது, ’இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்றார். ’நீங்கள் அதிகம் ரசித்தது பந்துவீச்சையா, பேட்டிங்கையா?’ என்று கேட்டபோது, ‘’எனது தோழியின் புன்னகை யை’’ என்று கிண்டலாகச் சொன்னார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close