[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

’கண்டிப்பா ரிஸ்க் எடுக்கணும்’: ஸ்ரேயாஸை புகழும் விராத்

shreyas-has-come-along-really-well-kohli

கடும் நெருக்கடிக்கு இடையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய விதம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராத் கோலி 114 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் எடுத்தனர். போட்டிக்குப் பின் பேசிய விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்தார். 

அவர் கூறும்போது, ’’போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து ஸ்ரேயாஸ் ஆடியவிதம் அருமையாக இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் துணிச்சலாக அவர் ஆடினார். அவரது ஆட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார். தொடர்ந்து அணிக்காக அவர் சிறப்பாக ஆடுவது நம்பிக்கை அளிக்கிறது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடி, அணியை வெற்றி பெற செய்வதில் கவனம் செலுத்துவேன். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை தான் ஸ்ரேயாஸ் செய்திருக்கிறார். 

நெருக்கடிக்கு இடையில் அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது.  நீங்கள் யார், உங்கள் ஆட்டம் என்ன, நீங்கள் என்ன மாதிரியான வீரர் என்பதை உணர்ந்து ஆட வேண்டியது முக்கியம். அந்த வகையில் ஸ்ரேயாஸ் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்.  நான் தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் அடித்தது பற்றி கேட்கிறீர்கள். அணியின் டாப் 3 வீரர்கள் ஸ்கோரை உயர்த்த வேண்டும். நான் எனக்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு ஆடினேன். அதற்காக பெருமை கொள்கிறேன்’’ என்றார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close