[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஆம்லா..!

hashim-amla-retires-from-international-cricket

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா ஓய்வை அறிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர் ஹாசிம் ஆம்லா. இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 18672 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் மொத்தமாக 55 சதங்கள் மற்றும் 88 அரைசதங்கள் ஆகியவற்றை அடித்துள்ளார். மேலும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சார்பில் 300 ரன்களை கடந்த ஒரே வீரர் ஆம்லா தான். 

இந்நிலையில் 36 வயதான ஹாசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆம்லா, “தென் ஆப்பிரிக்கா அணிக்காக நான் விளையாடியதற்கு கடவுளுக்கு நன்றி. இந்தக் கிரிக்கெட் பயணத்தில் நான் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளேன். அத்துடன் கிரிக்கெட் வாழ்வில் நல்ல நண்பர்கள் பலரையும் சம்பாதித்துள்ளேன். 

எனது கிரிக்கெட் பயணத்திற்கு உதவியாக இருந்த எனது தாய் மற்றும் தந்தைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல என்னுடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் என்னை எப்போதும் ஊக்குவித்த ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2000,3000,4000,5000,6000,7000 ஆகிய ரன்களை கடந்த வீரர் என்ற சாதனைக்கு ஹாசிம் ஆம்லா சொந்தக்காரராவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close