[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

மயங்க், பஞ்சால் அதிரடி: இந்திய ஏ அணி அபார வெற்றி!

west-indies-tour-india-a-wins-2nd-un-official-test

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. 

இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையி லான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹாட்ஜ் 65, புரூக்ஸ் 53, கார்ன்வல் 56 ரன்கள் எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பஞ்சால் 58 ரன்க ளையும் துபே 79 ரன்களையும் எடுத்தனர். பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 149 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய ஏ அணி தரப்பில், கவுதம் 5 விக்கெட்டையும் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டையும் சாய்த்தனர். 

இதன் மூலம் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 81 ரன்களும் பஞ்சால் 68 ரன்களும் ஈஸ்வரன் 59 ரன்களும், அன்மோல் ப்ரீத் சிங் 51 ரன்களும் எடுத்தனர். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. 

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சால் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close