[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

எனக்கும், ரோகித்துக்கும் பிரச்னை என யாரோ குழப்புகிறார்கள் - விராட் கோலி

indian-skipper-virat-kohli-terms-reports-of-rumoured-rift-with-rohit-sharma-as-baffling-and-ridiculous

ரோகித் சர்மாவுக்கும், எனக்கும் இடையே குழப்பம் ஏற்படுத்துவதன் மூலம் யார் பயன்பெறுகிறார்கள் என தெரியவில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக இன்று கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் கூட்டாக பதில் அளித்தனர்.

                   

அப்போது, ரோகித் சர்மா உடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட், “நீங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வு அறையில் நிலவும் சூழல் மிகவும் முக்கியமானது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால், நம்மால் நன்றாக விளையாடியிருக்க முடியாது. 

ஒரு நபரை எனக்கு பிடிக்கவில்லை என்றால், நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதிலும், என்னுடைய முகத்திலும் நீங்கள் பார்க்கலாம். அது மிகவும் எளிமையான ஒரு விஷயம். நான் எப்பொழுதும் ரோகித் சர்மாவை பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்தவர் என்பதை நான் நம்புகிறேன். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது ஒருவிதமான குழப்பம்தான். இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என்றார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close