[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

‘விதிகளை மீறி மனைவியை தங்க வைத்த வீரர்’ - நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ ?

senior-indian-player-flouted-family-rule-during-wc

விதிகளை மீறி உலகக்கோப்பை தொடரில் மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர், தொடர் முழுவதும் மனைவியை கூடவே தங்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால், இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.

இந்நிலையில் விதிகளை மீறி உலகக்கோப்பை தொடரில் மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர், தொடர் முழுவதும் குடும்பத்தினரை கூடவே தங்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் 3-ஆம் தேதி கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது மூத்த வீரர் ஒருவர், தனது மனைவியை தொடர் முழுக்க தன்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அனுமதியை மீறிய அந்த வீரர், தொடர் தொடங்கியதில் இருந்து முழுவதுமாக தனது மனைவியை கூடவே தங்க வைத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எனவே அந்த வீரர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. அதுவும் தொடர் தொடங்கியதில் இருந்து 20 நாட்கள் கழித்துதான் குடும்பத்தினர் வீரர்களுடன் தங்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close