[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!

ms-dhoni-should-be-informed-about-his-future-feels-virender-sehwag

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர முடியாது என்பதை,  தேர்வுக்குழுவினர் தோனியிடம் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறினார்.

உலகக் கோப்பைத் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில் இருந்து, தோனியின் ஓய்வு, முக்கிய பேச்சாக இருந்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து, அவரது ஓய்வு குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அவர் ஓய்வு பெற்று விடுவது நல்லது என்று ஒரு தரப்பும், இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம் என்று ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றன. இதில் முன்னாள் வீரர்கள் சிலரும் கூட தோனிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்றும் கூறப்பட்டன. ஆனால் தோனி ஓய்வு முடிவு பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. 

அவராக ஓய்வு முடிவை வெளியிடவேண்டும் என்று விரும்பும் இந்திய கிரிக்கெட் வாரியம், இனி அடுத்தடுத்த தொடர்களில் அவரை அணிக்குத் தேர்வு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அப்படியே தேர்வு செய்தாலும் ஆடும் லெவனில் சேர்க்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, அணியில் இடம் பெற முடியாது என்பதை தேர்வுக் குழுவினர் தோனியிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘’தோனியிடம் நிலைமையை சொல்வது தேர்வாளர்களின் கடமை. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இனி தொடர முடியாது என்பதை தோனியிடம் அவர்கள் தெரிவிக்க வேண்டும். பிறகு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்துகொள்ளட்டும்’’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close