[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா : முதலில் இங்கிலாந்து பவுலிங்

australia-vs-england-2nd-semi-final-australia-opt-to-bat

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பிரிட்டனில் உள்ள ஹெச்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா காயம் பட்டதால், அவருக்குப் பதிலாக பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இன்று களத்தில் அனல் பறக்கும். சொந்த மண் என்பதால் இங்கிலாந்து அணி சவாலாக இருக்கும். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டால் கட்டுக்கடங்காத காளை போல மாறிவிடுவார்கள் என்பதால், அவர்களின் ஆட்டம் எதிர்பாராத அளவுக்கு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close