[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

‘சில தரமான சம்பவங்கள்’ - நினைத்தாலே இனிக்கும் ‘தல’ தோனி

ms-dhoni-birth-day-today-some-unforgettable-moments

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த தினமான இன்று அவரது முக்கிய நிகழ்வுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மகேந்திர சிங் தோனியின் 38வது பிறந்த தினம் இன்று. 2004ஆம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நுழைந்த தோனி, 15வது ஆண்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 224 ரன்கள் ஆகும். இதில் 6 சதங்கள், 33 அரை சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் அடங்கும். 

ஒருநாள் போட்டிகளில் 349 போட்டிகளை கடந்து விளையாடிக்கொண்டிருக்கிறார். 10723 ரன்களை கடந்து சென்று கொண்டிருக்கிறார். 10 சதங்கள் மற்றும் 72 அரை சதங்களை குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள தோனி 1617 ரன்களை எடுத்துள்ளார். அத்துடன் 190 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 23 அரை சதங்கள் உட்பட 4432 ரன்கள் குவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிகள் உலகக் கோப்பை, ஐபிஎல் கோப்பை என அனைத்தையும் வென்றுவிட்டார்.

இவரது கிரிக்கெட் வாழ்வில் மறக்கமுடியாத பல நினைவுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை காணலம். 2005ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்றது. கங்குலி தலைமையிலான இந்திய அணி முதல் பேட்டிங் செய்தது. அன்று மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்ட தோனி, ஆரம்பம் முதலே அதிரடியை தொடங்கினார். 123 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். அன்றைய போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அன்று பேட்டியளித்த கங்குலி இந்தியாவிற்கு ஒரு நல்ல பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

அதே ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்தது. 299 என்ற கடினமான இலக்கை எட்டுவதற்கு டிராவிட் தலைமையிலான இந்திய அணி தடுமாறியது. அன்றும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய தோனி 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்தார். 10 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. 

2007ஆம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற்றது. அன்று இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 157 ரன்கள் சேர்த்திருந்தது. அதை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி இலக்கை நெருங்கிவிட்டது. போட்டியின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என இருந்தது. அப்போது இந்திய அணியில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு ஓவர் இருந்தும், இளம் வீரர் ஜொகிந்தர் ஷர்மாவிற்கு தோனி ஓவர் கொடுத்தார். அனைவரும் ஆச்சர்யமடைய, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. அன்று 275 என்ற இலக்கை எதிர்த்து விளையாடி இந்திய அணியில், சேவாக் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் 18 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 35 ரன்களில் வெளியேற, இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. பின்னர் இறங்கிய தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அதிலும் கடைசியாக சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெறச்செய்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close