[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

“எல்லா போட்டியிலும் சிறப்பாக விளையாடுகிறார்கள்” - பங்களாதேஷை பாராட்டிய சச்சின் 

world-cup-2019-this-is-the-best-i-have-seen-bangladesh-play-says-sachin-tendulkar

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியிடம் போராடி தோல்வி அடைந்த பங்களாதேஷ் அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பங்களாதேஷ் இறுதிவரை போராடி 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

              

பந்துவீச்சில் பலம் வாய்ந்த இந்திய அணி பங்களாதேஷை 250 ரன்களுக்குள் எளிதில் வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுவிடுமோ எனும் அளவில் அந்த அணியின் வீரர்கள் நேர்த்தியாக விளையாடி இலக்கை துரத்தினர். இருப்பினும், இறுதியில் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை இந்திய அணி வெற்றியுடன் முடித்துவைத்தது.

              

இந்நிலையில், சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடியுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமல்ல, தொடர்ச்சியாக அவர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நான் பார்த்த வரையில் இதுதான் பங்களாதேஷ் அணி வெளிப்படுத்தும் சிறப்பான ஆட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

                         

அதேபோல், கேப்டன் விராட் கோலியும் போட்டி முடிந்த பின்னர் பேசும் போது பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பாராட்டினார். கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அவர்கள் விளையாடினர் என கோலி தெரிவித்தார்.

இந்தியாவிடம் பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை அந்த அணிக்கு இழந்துள்ளது. அந்த அணி ஜூலை 5 ஆம் தேதி லாட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள தனது இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இன்று நடைபெறும் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியைப் பொறுத்து பங்களாதேஷ் - பாகிஸ்தான் இடையிலான போட்டி முக்கியத்துவம் பெறும்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close