[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பங்களாதேஷுக்கு எதிரான போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்

bangladesh-vs-india-2-changes-in-indian-team

பங்களாதேஷூக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

உலகக் கோப்பைத் தொடரில், இன்று நடக்கும் 40 வது லீக் போட்டியில், இந்தியா -பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணிக் கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வியாக அந்தப் போட்டி அமைந்துவிட்டது. அதை சரிகட்ட இன்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடும். இன்று வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.  

பர்மிங்ஹாமில் இந்தப் போட்டி நடக்கிறது. இந்திய அணி, நடப்புத் தொ‌டரில் 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்த நிலையில், மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பங்க‌ளாதேஷ் அணி 3 போட்டிகளில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அந்த அணியின் ஒரு போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு பதிலா கத்  தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெஹிடி ஹாசன் மற்றும் மஹமத்துல்லாவுக்கு பதிலாக ருபல் ஹூசைன், சபீர் ரஹ்மான் இணைந்துள்ளனர். 

இந்திய அணி விவரம்:
கே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராத் கோலி, ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர்குமார், ஷமி, சாஹல், பும்ரா.

பங்களாதேஷ்:
தமிம் இக்பால், சவும்யா சர்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், லிடன் தாஸ், மோசாடெக் ஹூசைன், சபிர் ரஹ்மான், சைபுதீன், மோர்ட்சா, ரூபல் ஹூசைன், முஸ்தபிஷூர் ரஹ்மான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close