[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

''நீ 2 கப்: நான் 5 கப்'' - இந்தியா - ஆஸி., போட்டிக்காக வெளியிடப்பட்ட கிண்டல் விளம்பரம்

star-sports-shared-a-ad-about-india-aus-match

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை குறிக்கும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ், கிண்டலான விளம்பரம் ஒன்றை பகிர்ந்துள்ளது. 

12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணி போட்டியை குறிக்கும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிண்டலான விளம்பரம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த விளம்பரத்தில் இந்திய ரசிகர் ஒருவர் இரண்டு உலகக்கோப்பைகளை தோள்பட்டையில் வைத்துக்கொண்டு நடனமாடியபடி மற்ற நாட்டு வீரர்களை கிண்டல் செய்கிறார். 

மற்ற நாட்டு வீரர்களும் வெறுப்பாக நின்றுகொண்டு இருக்கிறார்கள். அப்போது பின்னால் வரும் ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் 5 உலகக்கோப்பைகளை வைத்துக்கொண்டு நடனம் ஆடி இந்திய ரசிகரை கிண்டல் செய்கிறார். மற்ற நாட்டு ரசிகர்களும் இந்திய ரசிகரை பார்த்து சிரிக்கிறார்கள். 

இரண்டு முறை உலக்கோப்பையை வென்ற இந்தியாவும், 5 முறை உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும் இன்றைய போட்டியில் மோதவுள்ளதை நகைச்சுவையாக சொல்லும் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close