[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

முதல் பேட்டிங் எடுத்தது தவறா ? - விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே..!

csk-first-batting-going-wrong-struggle-in-batting

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே இன்று இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால், அரங்கம் முழுவதிலும் சென்னை ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. எப்போதும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் சென்னை கேப்டன் தோனி, இந்த முறை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஆனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து டு பிளசிஸ் 6 (11) அதிர்ச்சி கொடுத்தார். சுழற்பந்துவீச்சாளர் ராகுல் வீசிய பந்தில் அவர் கேட்ச் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து இளம் வீரர் ஜெயந்த் யாதவ் வீசிய பந்தில் சுரேஷ் ரெய்னா 5 (7) ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் சென்னை ரசிகர்கள் தலையில் கையை வைத்துவிட்டனர். இந்த நிலையில் வாட்சனும் 13 (10) ரன்களில் குருனல் பாண்ட்யாவிடம் விக்கெட்டை இழக்க, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததோ தவறோ ? என்ற கேள்வி பிறந்துள்ளது. 10 ஓவர் நிலவரப்படி சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 21 (19) ரன்களுடனும், அம்பத்தி ராயுடு 7 (11) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close