[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்: யாரெல்லாம் விளையாடுவாங்க ? ஒரு உத்தேச அணி

csk-vs-mi-probable-xi-and-players-to-watch-out-for

ஐபிஎல் தொடரில் முதல் பிளே ஆப் சுற்றுப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. 12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்தp போட்டியில் லீக் சுற்று முடிந்து, முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் போட்டியில், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ரோகித் சர்மா தலை மையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 3 முறை சாம்பியன் களான இந்த அணிகள் மோதுவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். இதுவரை பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. எட்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு செல்லும் தீவிரத்தில் அந்த அணி இருக்கிறது.

Image result for mumbai indians

அப்படியென்றால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் விளையாட வாய்ப்பு இருக்குனு கொஞ்சம் பார்க்கலாம். இது அதிகாரப்பூர்வமான 11 வீரர்கள் பட்டியல் இல்லை. ஆனால், இந்தப் பட்டியலில் இருக்கும் வீரர்களின் கடந்த கால செயல், தோனியின் வியூகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதேபோலLஆனஅ மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலும்.

Image result for csk team

சென்னை சூப்பர் கிங்ஸ் (உத்தேச அணி): ஷேன் வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, முரளி விஜய், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவே, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் இன்றையப் போட்டியில் இடம் பெறுவார்கள். 

மும்பை இந்தியன்ஸ் (உத்தேச அணி): ரோகித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், க்ருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ராஹூல் சாஹர், மெக்லனகன், மலிங்கா, பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close