[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

டி காக், ரோகித் சிறப்பான ஆட்டம் - மும்பை அணி 187 ரன் குவிப்பு

ipl-2019-mi-vs-rr-mumbai-indians-post-187-5-after-rohit-de-kock-got-off-to-a-flying-start

டி காக், ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை இண்டியன்ஸ் 187 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. மும்பை  அணியில் கடந்தப் போட்டியில் ஓய்வு பெற்றிருந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பினார். 

                      

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித், டி காக் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து தந்தது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி, 4.2 ஓவர்களிலே 50 ரன்களை எட்டியது. ரோகித் சர்மா 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

                         

டி காக் ஒரு புறம் சிறப்பாக விளையாடினாலும் சூர்ய குமார் யாதவ் 16(10), பொல்லாடு 6, இஷான் கிஷான் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டி காக் 52 பந்தில் 81 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மூன்று சிக்ஸர் விளாசினார்.

             

இறுதியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. பாண்ட்யா 11 பந்துகளில் 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் சாய்த்தார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close