[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பேர்ஸ்டோவ், வார்னர் ஆட்டமிழப்பு - 137 ரன்னை எட்டுமா ஹைதராபாத்?

srh-vs-mi-ipl-mumbai-indians-post-136-7-against-sunrisers-hyderabad

ஹைதாராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 136 ரன்கள் எடுத்தது. 

ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து சூர்ய குமார் யாதவும் 7 ரன்னில் நடையைக் கட்டினார். தொடர்ச்சியாக விக்கெட் வீழ்ந்தன. டி காக் 19, இஷான் கிஷன் 17, ஹர்திக் பாண்ட்யா 6 என அடுத்தடுத்து விக்கெட் சரிந்தன. 86 ரன்னிற்குள் மும்பை அணி 6 விக்கெட்களை இழந்துவிட்டது. 

          

கடைசி கட்டத்தில் பொல்லார்டு சிக்ஸர் மழை பொழிந்தார். அதனால், மும்பை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியில், மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 26 பந்தில் 4 சிக்ஸர் உட்பட 46 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

137 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய ஹைதராபாத் அணியில் பேர்ஸ்டோவ் 16, வார்னர் 15 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  விஜய் சங்கரும் 5 ரன்னில் நடையை கட்டினார். 7 ஓவர்கள் முடிவில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது ஹைதராபாத் அணி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close