[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

விளாசித் தள்ளினார் ரஸல்: மீண்டும் சோகத்தில் பெங்களூரு!

andre-russell-s-48-off-13-stuns-rcb-to-keep-them-winless

பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி, ரஸலின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். 

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் பார்த்திவ் படேலும், விராத் கோலியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பெங்க ளூர் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் விளை யாடியது. இருவரும் 5.1 ஓவரிலேயே 50 ரன்கள் கொண்டு வந்தனர். நிதானமாக விளையாடி வந்த பார்த்திவ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 64 ரன்னில் பெங்களூர் அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

பிறகு விராத் கோலியுடன், டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து சிக்ஸர்களாக பறக்கவிட்டனர். அதனால், பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலி 49 பந்தில் 2 சிக்ஸர் 9 பவுண்டரி உட்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, டிவில்லியர்ஸ் 32 பந்தில் 4 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, பெங்களூர் அணி 18.5 ஓவரில் 185 ரன் எடுத்திருந்தது.

கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ் 13 பந்தில் 28 ரன்கள் எடுக்க, பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 16வது முறையாக 200 ரன்களை கடந்து சென்னை அணியின் சாதனையை பெங்களூர் சமன் செய்தது.


பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் 31 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். உத்தப்பாவும் நிதிஷ் ராணாவும் நிதானமாக ஆடி முறையே 33, 37 ரன் எடுத்தனர். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 19 ரன்னில் வெறியே தடுமாறத் தொடங்கியது கொல்கத்தா. அப்போது ஆபத்பாந்தவனாக வந்த ஆண்ட்ரு ரஸல் அதிரடியாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்தார்.

18 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய அவர், 19 வது ஓவரில் டிம் சவுதி வீசிய பந்தில் 4 சிக்சரும் ஒரு பவுண்டரியும் நொறுக்கினார். இதையடுத்து கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஸல், 13 பந்தில் 7 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 48 ரன் விளாசினார். இதையடுத்து பெங்களூரு அணி ஐந்தாவது தோல்வியைச் சந்தித்தது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close