[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

கேப்டன் பொறுப்பு குறித்து பிசிசிஐ முடிவு எடுக்கும்: தோனி

mahendra-singh-dhoni-sidesteps-captaincy-debate-ahead-of-zimbabwe-tour

இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது பேட்டிங் வரிசையை சரியாக முடிவு செய்வது பெரிய சவாலாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். இன்று ஜிம்பாப்வேக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுடன் உரையாடிய தோனி, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

மூன்று வகையான போட்டிகளிலும் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அணி இயக்குனர் ரவிசாஸ்திரியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த தோனி, கிரிக்கெட் விளையாடுவது தான் தன்னுடைய வேலை என்றும் கேப்டன் பொறுப்பு குறித்து பிசிசிஐ முடிவு எடுக்கும் எனவும் கூறினார்.

மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு குறித்து பேசிய அவர், பயிற்சியாளருக்கு ஹிந்தி மொழி தெரிந்திருப்பது நல்லது தான் என்றாலும் அது மட்டுமே ஒரே தகுதி இல்லை என்றார்.

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு, இந்த தொடர் ஒரு சவாலாகவும் அவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close