[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு

சிஎஸ்கே- ராஜஸ்தான் சேப்பாக்கத்தில் இன்று மோதல்: ரணகளப்படுத்துவாரா ராயுடு?

csk-take-on-rajasthan-royals-today

ஐபிஎல் தொடரில் சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல். கிரிக்கெட் தொடரின் 12 வது லீக் போட்டி, சென்னையில் இன்று நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது.

சிஎஸ்கே, தனது முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரையும் இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும் வென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் முதலாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடமும், இரண்டாவது போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடமும் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும்.

ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் அபார சதம் அடித்தார். அந்த அணியில் ஜாஸ் பட்லர், ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி என சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஜெயதேவ் உனட்கட், ஆர்ச்சர், கவுதம் உள்ளிட்ட சிறந்த பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். இதனால் அந்த அணி பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது. 

சிஎஸ்கே அணியில், அம்பத்தி ராயுடு தனது பழைய மேஜிக்கை காண்பிக்கவில்லை. கடந்த தொடரில் சிறப்பாக ஆடிய அவர், இந்த தொடரில் சொதப்பி வருகிறார். இருந்தாலும் சுரேஷ் ரெய்னா, வாட்சன், கேதர் ஜாதவ், தோனி என வலுவான பேட்டிங் லைன் அப்-பை கொண்டிருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், ஜடேஜா ஆகியோரும், வேகப்பந்துவீச்சில் தீபக் சாகரும், ஆல் ரவுண்டர் பிராவோவும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

சென்னையில் நடந்த முதல் லீக் போட்டியில் பிட்ச் மெதுவாக இருந்தது. இதுபற்றி விராத் கோலி, தோனி ஆகியோரும் வருத்தம் தெரிவித்தி ருந்தனர். அதனால் இன்றைய போட்டியில் ஆடுகளம் எப்படியிருக்கும் என்கிற ஆவல் ரசிகர்களுக்கு இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சிஎஸ்கே 12 முறையும், ராஜஸ்தான் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 8 மணிக்கு போட்டி நடக்கிறது.

முன்னதாக, ஐதராபாத்தில் நடக்கும் மற்றொரு போட்டியில், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close