சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் பந்து இப்படி திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை என ஹர்பஜன் சிங் கூறினார்.
12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் நேற்றுத் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர் மற்றும் ப்ராவோ ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றனர். பெங்களூரூ அணியில் மொயின் அலி, டிவில்லியர்ஸ், ஹெர்ட்மையர், கிராண்ட்ஹோம் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கினர்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்ததால் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகியோர் மிரட்டினர். இதனால் 17.1 ஓவரில் 70 ரன்னுக்கு பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் ஓர் அணியின் 6-வது மோசமான ஸ்கோர் இது. அதிகப்பட்சமாக பார்த்திவ் பட்டேல் 29 ரன் எடுத்தார்.
சிஎஸ்கே தரப்பில் ஹர்பஜன் சிங்கும், இம்ரான் தாஹிரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்டும் பிராவோ ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71 எடுத்து வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு 28 ரன்னும் சுரேஷ் ரெய்னா 19 ரன்னும் எடுத்தனர்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹர்பஜன் சிங் பேசும்போது, ‘’ஆடுகளம் இந்தளவு சுழல் பந்துவீச்சுக்கு உதவும் என்று எதிர்பார்க்கவில்லை. பந்து நன்றாக திரும்பியது. இதனால் எளிதாக விக்கெட் வீழ்த்த முடிந்தது. விராத் கோலி, மொயின் அலி, டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களின் விக் கெட்டை வீழ்த்தினேன். விராத், வில்லியர்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்துவது எப்போதும் மகிழ்ச்சித்தரக் கூடியது. இந்த ஆடுகளத்தில் 120, 130 ரன் வரை பெங்களூரு அணியால் எடுத்திருக்க முடியும். அவர்கள் சில தவறான ஷாட்களை ஆடியதால் ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு எனது பந்துவீச்சும்ம் உதவியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆட்டநாயகன் விருதை எனது குடும்பத்தினருக்கு சமர்பிக்கிறேன்’’ என்றார்.
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!