[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

மின்னல் வேகத்தில் சதம் அடிக்கும் கோலி - புதிய சாதனை

stats-reveal-indian-skipper-has-more-odi-centuries-than-four-countries-since-2017

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி ஒரு புதிய சாதனைய படைத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது 41ஆவது சதத்தை அடித்தார்.  

            

இந்நிலையில், இந்த சதம் அடித்ததன் மூலம் மற்றொரு புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விராட் கோலி 15 சதங்களை அடித்துள்ளார். இது இந்தக் காலளவில் சில கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் அடித்த மொத்த சாதங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானது. 

அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான்(14), வங்கதேசம்(13), மேற்கிந்திய தீவுகள்(12), இலங்கை(10) ஆகிய அணிகளின் வீரர்கள் மொத்தமாக அடித்த சதங்களைவிட விராட் கோலி(15) அதிக சதங்கள் அடித்துள்ளார். அத்துடன் சர்வேதச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் விளையாடிய அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி 25 சதங்கள் அடித்துள்ளார். 

      

இத்தகையை சாதனையை செய்துள்ள விராட் கோலி ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையான 49 சதங்களை முறியடிக்க இன்னும் 9 சதங்கள் தான் தேவைப்படுகின்றன. இந்த ஃபார்மில் விராட் கோலி விளையாடினால் அவர் வரும் உலகக் கோப்பையில் கூட இந்தச் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close