[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

“பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய தருணம் இது” - சச்சின்

would-hate-giving-away-2-points-to-pakistan-in-world-cup-2019-sachin-tendulkar-echoes-sunil-gavaskar-s-stand

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடி அந்நாட்டை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து, உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் பாகிஸ்தான் உடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்து இருந்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடுவதை பிற நாடுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

          

இந்நிலையில், பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா விளையாட வேண்டும் என்ற கருத்தினை சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். “உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்தியா எப்பொழுதும் பாகிஸ்தானை வெற்றி பெற்று வந்துள்ளது. இது பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய நேரம். பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகளை கொடுத்து அந்நாட்டிற்கு உதவுவதை விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்தியாதான் முதன்மையானது. அதனால், நாடு என்ன முடிவு எடுக்கிறதோ, அந்த முடிவிற்கு மனமார கட்டுப்படுவேன்” என்று சச்சின் கூறியுள்ளார். 

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் இதே கருத்தினை கூறி இருந்தார். “உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடினால் இந்தியாதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் விளையாடாமல் போனால், பாகிஸ்தான் வெற்றி பெறும். 

           

இதனால் அவர்கள் எளிதில் வாங்கும் இரண்டு புள்ளிகளை விடக்கூடாது. உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை இந்திய அணி  தோற்கடித்துள்ளது. அதனால் பாகிஸ்தான் அணி போட்டியில் முன்னோக்கிச் செல்லாமல் இருக்க நாம் முட்டுக்கட்டை போட வேண்டும்.

ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடுவோமா என்ற கேள்விக்கு நான் நாட்டின் பக்கமே நிற்கிறேன். இந்திய அரசு என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்படுகிறேன். நாம் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியாவுக்குதான் இழப்பு” எனத் தெரிவித்து இருந்தார் கவாஸ்கர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close