[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

"ஆஸ்திரேலிய அணி மீது ஆதிக்கம் செலுத்துவார் கோலி" மேத்யூ ஹேடன்

virat-kohli-will-be-dominant-against-australia-says-mathew-hayden

இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மத்தேயு ஹேடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இதனால் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி அந்தத் தோல்விக்கு பழிவாங்கும் என்பதால் தொடரில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மத்தேயு ஹேடன் இந்தத் தொடர் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஹேடன், “இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா நன்றாக விளையாடிவருவதால் ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருக்கும். அத்துடன் ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் சிறப்பாக பந்துவீசி வந்தாலும் அவருக்கு இது முதல் இந்திய தொடர் என்பதால் பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனாலும் இந்திய ஆட்டக்காரர்களின் தற்போதயை ஆட்டம் சிறப்பாக உள்ளதால் விராட் கோலி இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவார்”எனக் கூறினார்.

இதற்கிடையே இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், “இந்தியா கிரிக்கெட் அணி தன்னுடைய சொந்த நாட்டு சூழலில் எப்போதும் சிறப்பாக விளையாட கூடிய அணி. இதனால் நாங்கள் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்றால் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும்” எனக் கூறினார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் 24 ஆம் தேதி முதல் டி20 போட்டியுடன் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close