[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“தோனியின் அருமை இப்ப புரியுதா?” - ஆதங்கப்பட்ட தல ரசிகர்கள்..!

kohli-and-dhoni-missed-after-india-s-humiliating-defeat-in-fourth-odi-as-fans-meme-out-displeasure

‘தோனி மெதுவா விளையாடுறாருனு சொன்னவெல்லாம் வரிசையா வாங்க’ !!! பறக்கும் மீம்ஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. தொடரை வென்றிருந்த போதும், 212 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வியை தழுவியது இந்திய அணிக்கு ஒரு கரும்புள்ளியான போட்டிதான்.

            

இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், அனுபவ வீரரான தோனியும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. பந்துவீச்சில் சமி, பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இல்லை. இவையெல்லாம், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில்தான், தோனி இருந்திருந்தால் இன்றைய போட்டி எப்படியும் வேறு மாதிரி முடிந்திருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். குறிப்பாக, தோனி நிதானமாக விளையாடுகிறார் என்ற விமர்சனத்தை குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் தங்களது கோபத்தை கொட்டியுள்ளனர். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தோனி எப்படி நிதானமாக விளையாடி அணியை மீட்டார் என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.

         

தோனியின் இக்கட்டான காலம்:-

தோனியின் கிரிக்கெட் வரலாற்றில் 2017ம் ஆண்டின் இறுதிப் பகுதியும், 2018ம் ஆண்டும் மிகவும் மோசமான காலம். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்க் கொண்டார். மிகவும் நிதானமாக விளையாடுகிறார். முன்பைப் போல் ஷாட் அடிக்க முடியாமல் தடுமாறுகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதோடு, இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்களும் ஒலித்தன. 

            

தோனி கடந்த ஆண்டில் நிறைய போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பது உண்மைதான். ஆனால், சில போட்டிகளில் முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்த நேரத்தில் அதிக தன்னுடைய அனுபவத்தால் அணியை மீட்டார். ஆனால், அப்படி இருந்தும் அவர் மிகவும் நிதானமாக விளையாடுவதாக விமர்சிக்கப்பட்டார். நிறைய நேரங்களில் இக்கட்டான நேரங்களிலேயே தோனி களமிறக்கப்படுகிறார் என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.

              

தோனி 51 (96)

இதற்கு உதாரணமாக பல போட்டிகளை கடந்த ஆண்டில் சொல்லலாம். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை மிகவும் முக்கியமானது. இந்தப் போட்டியில் 4 ரன்னில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தவான் (0), கோலி (3), ராயுடு (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த நேரத்தில் ரோகித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணியை மீட்டெடுத்தார் தோனி. 96 பந்தில் 51 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

         

வழக்கமாக இதுபோன்ற போட்டிகளில் தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருப்பார். இந்தப் போட்டியில் அணி ஒரு கவுரமான ஸ்கோர் வருவதற்கு வித்திட்டார். மற்றொருபுறம் தோனி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். அன்று தனக்கு கிடைத்த வாய்ப்பினை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார் என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள். 

பாகிஸ்தான் போட்டி ( இந்தியா 29/5 --> 227/6, தோனி 113*)

இந்நிலையில், இன்றையை போட்டியின் தோல்விக்கு பிறகு பலரும், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தோனி எப்படி நிலைத்து நின்று ஆடியுள்ளார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். அதில், குறிப்பாக 2012ம் ஆண்டு இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில், சதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை 227 ஆக உயர்த்தியதை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

          

பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் காம்பீர் (8), சேவாக் (4), கோலி (0), யுவராஜ் (2), ரோகித் (4) என வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஆனால், தோனி 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தொடரும் மிடில் ஆர்டர் சிக்கல்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் நீண்ட காலமாகவே கவலைக் கிடமாக இருந்து வருகிறது. டாப் ஆர்டரில் ரோகித், தவான், கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், மிடில் ஆர்டரில் சிறப்பான வீரர்கள் என்ற பெயரினை ராயுடு, தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல், ரகானே என யாரும் பெறவில்லை.

           

இன்னும் சில மாதங்களில் உலகக் கோப்பை உள்ள நிலையில், இந்தப் பிரச்னை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்தப் போட்டியில் ராயுடு, தினேஷ் இருவரும் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்ததாக பலராலும் பேசப்பட்டது. ஆனால், இன்றையப் போட்டிதான் அவர்களுக்கான உண்மையான சோதனைக் களம்.

புத்துணர்ச்சியுடன் தோனி

மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு வந்த தோனி கடந்த ஆண்டு பார்மில் இல்லை. இந்த நிலையில்தான் அவர், 2019ம் ஆண்டினை புத்துணர்ச்சியுடன் தொடங்கியுள்ளார். தொடங்கிய வேகத்தில் மூன்று அரைசதங்களை அடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும், 3வது போட்டியில் தோனி இருந்திருந்தால் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றிருப்பார் என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

         

ஆனால் இன்று தோனியின் இழப்பை இந்திய அணி மட்டுமல்ல கிரிக்கெட் உலகமே பார்த்துவிட்டது. விக்கெட்டை இழந்து தடுமாறும் நேரத்தில் அணிக்கு தடுப்பு சுவராகவும், எதிரணிக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கும் தோனியின் அருமையை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

                  

மேலும், தோனி இருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். இளம் வீரர்களும் தோனி இருந்தால் ஒரு பதட்டமின்றி விளையாடுவார்கள் எனக்கூறப்படுகிறது. மேலும், இளம் வீரர்கள் தோனியை ரோல் மாடலாக கருதுவதும் அணியில் இன்னும் வழக்கமாக உள்ளது.

        

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவிப் பேட்டியில் சர்ச்சையில் சிக்கிய பாண்ட்யாவும், ராகுலும் பல கேள்விகளுக்கு கோலியை பதிலாக முன்மொழிந்துவிட்டு, சிறந்த கேட்பன் என்ற கேள்விக்கு மட்டும் தோனியின் பெயரை கூறியது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் கூட அணியில் புதிதாக விளையாட வந்த சுப்மன் கில் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் தொப்பியை பெற்றுக்கொண்டு அணிக்கு வராமல், தோனியின் கையாள் தொப்பியை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் அணிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close