[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங், சுப்மான் கில் அறிமுகம்!

nzvind-4th-odi-new-zealand-field-shubhman-gill-debuts

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டி, ஹாமில்டனில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் அறிமுக வீரராக சுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் வெற்ற பெற்ற இந்திய அணி, மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டா வது மற்றும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி, ஹாமில்டனில் இன்று நடக்கிறது. 

கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இது அவருக்கு 200 வது ஒரு நாள் போட்டி. கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தோனி, இன்றைய போட்டியிலும் ஆடவில்லை. இளம் வீரர் சுப்மான் கில், அறிமுக வீரராக களமிறங்குகிறார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை, தோனி வழங்கினார். முகமது ஷமிக்கு பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் ஆடி வருகின்றனர். 

அணி விவரம்:

இந்தியா:

ரோகித் சர்மா(கேப்டன்), தவான், சுப்மான் கில், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது.

நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், நிக்கோலஸ், ராஸ் டெய்லர், லாதம், ஜிம்மி நீஷம், சன்ட்னர், கிராண்ட்ஹோம், அஸ்லே, மேட் ஹென்றி, போல்ட்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close