[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

‘4வது இடம் அவருக்கானது’ தோனி மீது மீண்டும் பாசத்தை காட்டிய ரோகித் !

ms-dhoni-india-s-ideal-no-4-rohit-sharma-differs-with-virat-kohli

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4வது இடத்தில் பேட்டிங் செய்தால் சந்தோசமடைவேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

தோனிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது. தன்னை வடிவமைத்த ஒரு கேப்டனுக்கு என்ன மதிப்பும், மரியாதையும் கொடுக்க வேண்டுமோ அதனை ரோகித் தவறாமல் கொடுத்து வருகிறார். ஏனெனில், தோனி கேப்டனாக இருந்தபோது அவருடைய ஆலோசனையின் பேரில் தான் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அந்த திருப்பம் ரோகித்தின் கிரிக்கெட் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.

                

அந்த நன்றியை மறக்காத ரோகித், கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்கும் பொழுதெல்லாம், தோனியை 3, 4-வது இடங்களில் இறக்கி அழகு பார்ப்பார். மேலும், தோனியின் கேப்டன் ஷிப் குறித்தும் அவர் புகழ்ந்து பேச மறந்ததில்லை.

இந்நிலையில், தோனியின் மீதான தன்னுடைய பாசத்தை ரோகித் சர்மா மீண்டும் காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் 133 ரன் விளாசினார். தோனி 96 பந்தில் 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், இந்திய அணி 34 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டி முடிந்த பிறகு பேசிய ரோகித் சர்மா, “தோனியை 4வது இடத்தில் இறக்கினால், மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

              

இதுகுறித்து ரோகித் பேசுகையில், “தனிப்பட்ட முறையில், அணியில் அவருக்கான இடம் 4தான் என்பது என்னுடைய கருத்து. ராயுடு 4வது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதனால், 4வது இடத்தில் யார் இறங்குவது என்பது முற்றிலும் கேப்டன், பயிற்சியாளரை பொறுத்தது. ஒட்டுமொத்தமாக தோனியின் பேட்டிங்கை கவனித்தால் அவரது ஸ்டிரைக் ரேட் 90.

இன்றையப் போட்டியின்(நேற்று) சூழ்நிலை முற்றிலும் வித்தியாசமானது. அவர் பேட்டிங் செய்ய வரும் போது வெகு விரைவாக மூன்று விக்கெட்களை இழந்துவிட்டோம். ஆஸ்திரேலிய அணியினர் சிறப்பாக பந்துவீசினர். அந்த நிலையை எளிதில் கடந்து, 100 ரன் பார்ட்னர்ஷிப் அடிக்க முடியாது. அதனால், கொஞ்சம் பிடிக்கும் நிலைத்து ரன்களை எடுக்க. நானும் தொடக்கத்தில் நிதானமாகதான் ஆடினேன்” என்று கூறினார்.

                  

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆடும் லெவனில் 4வது இடத்திற்கான சர்ச்சை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரகானே என பலரையும் கேப்டன் விராட் கோலி முயற்சி செய்துவிட்டார். இறுதியில், அம்பத்தி ராயுடுவை களமிறக்கினார் விராட். கடைசி வரை தோனிக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை. இந்நிலையில் தான் தோனி 4வது இடத்தில் இறங்கினால் மகிழ்ச்சி அடைவேன் என்று ரோகித் கூறியுள்ளார்.

              

தோனி 4வது வீரராக களமிறங்குவது மிடில் ஆடர் பிரச்னைக்கு தீர்வாக அமைவதோடு, அவரது திறமையை காட்டுவதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்பதே ஹர்ஷா போஹ்லே போன்ற நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. “யுவராஜ் சிங், ரகானே, மணிஷ் பாண்டே என பலரையும் அந்த இடத்திற்கு பொறுத்தி பார்த்தாகிவிட்டது. தற்போது, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக்கும் சோதனை செய்து பார்த்துவிட்டோம். ஏன் தோனியை மட்டும் யோசிப்பதில்லை. ஒரு ஜாம்பவானை பேட்டிங் செய்யவே விடாமல் வைத்திருப்பது எப்படி சரியாகும்” என்று ஹர்ஷா போஹ்லே கேள்வி எழுப்பி இருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close