[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்

vijay-shankar-reveals-how-coach-rahul-dravid-helped-him-become-mentally-stronger-after-a-tough-nidahas-trophy-final

தான் மனரீதியாக பலமடைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உதவினார் என்று தமிழக வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் முடிவடைந்த பின்னர் இம்மாதமே இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது. 

            

இந்நிலையில், பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் அணியில் இருந்து நியூசிலாந்து தொடர் வரை நீக்கப்பட்டுள்ளனர். பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக விஜய் சங்கர், சுப்மன் கில் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜய் சங்கர் உடனடியாக 2வது ஒருநாள் போட்டியில் இருந்தே அணியில் இடம்பெறுவார். சுப்மன் கில் நியூசிலாந்து தொடரில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவார். 

               

இந்நிலையில், 27வயதான விஜய்சங்கர் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை பற்றி பேசினார். அப்போது, “தற்போது நான் மனரீதியாக வலிமையாக இருக்கிறேன். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் சுற்றுப் பயணம் தற்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

           

மேலும், 5வது இடத்தில் களமிறங்குவது குறித்து, “போட்டியை வெற்றியுடன் முடிக்கும் திறன் எனக்கு உள்ளதாக ராகுல் டிராவிட் நம்புகிறார். 5வது இடத்தில் களமிறங்குவது எனக்கு பொருத்தமாக இருக்கும். இரண்டு போட்டிகளில் போட்டியை நெருக்கமாக கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. 5வது இடத்தில் இறங்கும் போது 150 முதல் 160 வரை எடுக்க வேண்டியிருக்கும் அப்போது, போட்டியை திறமையாக விளையாடி முடிக்க வேண்டும்” என்று கூறினார். 

ஆல் ரவுண்டரான விஜய் சங்கர், இந்திய ஏ அணிக்காக 58, முதல்தரப் போட்டியில் 41 போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தரப் போட்டியில் 2099, ஏ அணிக்காக 1448 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல், முதல் தரப் போட்டியில் 32, ஏ அணிக்காக 43 விக்கெட் எடுத்துள்ளார்.

               

சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை 5 டி20 போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதில் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதில் 17 ரன் எடுத்தார். 3 விக்கெட்களை சாய்த்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை 18 போட்டிகளில் விளையாடி 313 ரன்னும், ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close