[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

2-வது டெஸ்ட்: ஆஸி.முதல் இன்னிங்ஸில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்! இந்தியா 6/1

australia-v-india-2nd-test-ishant-wraps-up-australia-for-326

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன் எடுத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. 

அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. போட்டி நடக்கும் ஆப்டஸ் மைதானம் புதிதாகக் கட்டப்பட்டது. இங்கு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா, அஸ்வினுக்குப் பதிலாக விஹாரியும் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும் ஹாரிஸும் களமிறங்கினர். இருவரும் அடித்து ஆடினார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பின்ச் அரைச்சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 112 ஆக இருந்தபோது பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அவர் வெளியேறினார். அடுத்து உஸ்மான் கவாஜா வந்தார்.

அவர் 5 ரன் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷான் மார்ஷும் ஹாரிஸும் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர். ஹாரிஸ் அபாரமாக ஆடி அரைசதத்தை தாண்டினார். அவர் 70 ரன் எடுத்திருந்த நிலையில் விஹாரி வீசிய பந்தில் துணை கேப்டன் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் டிம் பெய்ன் 16 ரன்னுடனும் கம்மின்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

டிம் பெய்ன் 38 ரன் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 310 ஆக இருந்தது. அடுத்து வந்த ஸ்டார்க் விக்கெட்டையும் உமேஷ் யாதவும் ஹசல்வுட் விக்கெட்டையும் இஷாந்த் சர்மாவும் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 326 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட் எடுத்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஷமிக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரின் ஆறாவது பந்தில் முரளி விஜய் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்டார்க். இதையடுத்து உணவு இடைவேளை விடப்பட்டது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ராகுலும் புஜாராவும் களத்தில் உள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close