[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: மந்தனா விளாசல், ஆஸி. சரண்டர்!

mandhana-spinners-demolish-australia-as-india-top-group-b

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. அனுபவ வீராங்கனையான மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. 

(மந்தனா)

இந்நிலையில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய அணி நேற்று சந்தித்தது. இரு அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார் என்பதற்கான போட்டியாக இது அமைந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மிதாலி ராஜ், மான்சி ஜோஷி நீக்கப்பட்டு அனுஜா பட்டீல், அருந்ததி ரெட்டி சேர்க்கப்பட்டனர். முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனியா பாட்டீயாவும் மந்தனாவும் களமிறங்கினர். வந்த வேகத்தில் தனியா 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரோட்ரிக்ஸ் 6 ரன்னில் வெளியேற, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனாவுடன் இணைந்தார். 

இருவரும் பந்துகளை நாலாபுறமும் அடித்து ஆடினர். மந்தனா, 55 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கவுர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் எல்லிஸ் பெர்ரி 3 விக்கெட்டும் கிம்மின்ஸ், கார்ட்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19.4 ஓவர்களின் 119 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 48 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகப்பட்சமாக பெர்ரி 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக் காமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல் 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close