[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“பதட்டமாக உணர்ந்தால் பந்துவீச இயலாது” - கலீல் கூறும் அனுபவங்கள்

indvswi-3rd-t20-khaleel-said-his-cricket-experience

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தற்போது நடந்து வரும் டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் தான் இன்று மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியின் சிறப்பு என்ன வென்றால், நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இறுதியாக சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி, காவிரிப் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது தான் அங்கு மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதனால் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வருகை தந்துள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணியில் விளையாடுவது தொடர்பாக பேட்டியளித்துள்ள இளம் வீரர் கலீல் அகமது, “நான் இந்திய அணியில் விளையாடுவதை ரசித்துக்கொண்டிருக்கிறேன். நான் சிறுவயதாக இருக்கும்போது, இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற கனவில் இருந்தேன். தற்போது நான் இந்தியாவிற்காக விளையாடிக்கொண்டிருக்கிறேன். விளையாடும் போது நான் பதட்டமாக உணர்ந்தால், என்னால் நான் நினைத்தது போல சிறப்பாக விளையாட முடியாது. இந்தியாவிற்காக சிறப்பாக விளையாட வேண்டும். அதற்காக நான் நம்பிக்கையுடன் பந்துவீச வேண்டும். ஒருமுறை நீங்கள் சிறப்பாக விளையாடினால், அது உங்களை மேலும் சிறப்பாக விளையாட தூண்டும்” என தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close