[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

கடைசி டி 20: ஸ்ரேயாஸ், வாஷிங்டனுக்கு வாய்ப்பு!

washington-sundar-iyer-may-get-a-chance-at-chepauk

சென்னையில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தத் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

லக்னோவில் கடந்த 6 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ரோகித் சர்மா அபார சதம் அடித்தார். இந்தப் போட்டி முடிந்ததும் வீரர்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்திய அணி வீரர்கள் நாளை சென்னை வருகிறார்கள்.

இந்திய அணி, இந்த போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. அங்குள்ள பிரிஸ்பன் நகரில் வரும் 21 ஆம் தேதி, முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டமாக சேப்பாக்கம் போட்டி அமையும்.

இதற்கிடையே கடந்த போட்டிகளில் வாய்ப்பளிக்கப் படாத, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம். கே.எல்.ராகுல், ரிஷாப் பன்ட், தவான் ஆகியோருக்குப் பதிலாக விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அவர்களின் ஃபார்மை கவனிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் எனவும் அதோடு சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என்று தெரிகிறது. இதனால் ரன் மழை பொழியவும் குல்தீப் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவும் இங்கு வாய்ப்பிருக்கிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close