[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

இன்று, முதல் டி20: வந்தாச்சு பொல்லார்ட், பிராவோ, இந்திய அணியில் மாற்றம்!

india-vs-west-indies-krunal-set-for-india-debut

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1-3 என்ற கணக்கிலும் பறிகொடுத்த அந்த அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

அதன்படி முதலாவது டி20 போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் இன்று  நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான தோனி நீக்கப்பட்டு இருப்பதால் தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் ஆகியோரில் ஒருவருக்கு விக்கெட் கீப்பிங் பணி வழங்கப்படும்.

விராத் கோலியின் இடத்தில் கே.எல்.ராகுல் களமிறங்குவார். பந்துவீச்சில் பும்ரா, கலீல் அகமது, புவனேஷ்வர்குமார், குல்தீப் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் மிரட்டும். உலகக் கோப்பை டி20 டைட்டிலை இரண்டு முறை வென்ற அணியும் அதுதான். கார்லஸ் பிராத்வெய்ட் தலமையிலான அந்த அணியில் பொல்லார்ட், டேரன் பிராவோ போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் திரும்பியுள்ளனர்.

(குணால் பாண்ட்யா)

ஐபிஎல் போட்டியில் இவர்கள் அதிரடியில் கலக்கி இருப்பதால் இந்த போட்டிகளிலும் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸலும் அணிக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவுதான் 

இந்தப் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 12 பேர் கொண்ட இந்திய அணியில், ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யாவும் இடம் பெற்றுள்ளார். அறிமுக வீரராக அவர் இன்று களமிறங்க வாய்ப்பிருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 8 டி20 போட்டிகளில் ஆடி, 2-ல் இந்தியாவும், 5-ல் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இந்தியா அணி விவரம்: 
தவான், ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட், குணால் பாண்ட்யா, சேஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது.
இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close