[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

முதல் தர கிரிக்கெட்டில் அம்பத்தி ராயுடு ஓய்வு!

ambati-rayudu-retires-from-first-class-cricket

முதல் தர கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்றுள்ளார். 

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. 33 வயதான இவர், கடந்த 17 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய ஒரு நாள் அணியில் கடைசியாக 2016-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தார். பிறகு இடம் பெறாமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கியமானவராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.

இதையடுத்து இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெறவில்லை. ’யோ யோ’வின் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். இதில் ராயுடு தோல்வி அடைந்தார் . இரண்டு வருடங்களுக்கு பிறகு அணியில் வாய்ப்புக் கிடைத்தும் யோ யோ டெஸ்ட், அந்த வாய்ப்பை ராயுடுவிடம் இருந்து பறித்துவிட்டது.

சிறப்பான ஃபார்மில் இருந்தும் ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடு சேர்த்துக் கொள்ளப் பட்டார். இந்திய அணி, 4 வரிசையில் இறங்கி ஆட சரியான வீரர் கிடைக்காமல் தவித்து வந்தது. அதற்கு சரியாகப் பொருந்தினார் அம்பத்தி ராயுடு. ‘உலகக் கோப்பை வரை அந்த இடத்தில் அவர் ஆடுவார்’ என்று விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  அவர் இப்போது நடந்து வரும் ரஞ்சிப் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். இந்த தொடரில் அடுத்தப் போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அவர் கடிதம் மூலம் தனது ஓய்வை தெரிவித்துள்ளார். அதில், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில்  கவனம் செலுத்த உள்ளதாகவும் இதனால் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல்தர டெஸ்ட் போட்டிகளில்‌ இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் அம்பதி ராயுடு கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல்தர டெஸ்ட் போட்டிகளில்‌ இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

87 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ள ராயுடு, 6,151 ரன்கள் குவித்துள்ளார். 16 சதம் அடித்துள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close