[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

கடைசி போட்டிக்கு இதுதான் இந்தியன் டீம் ! காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்

india-s-predicted-xi-for-5th-odi-hosts-set-to-tinker-with-bowling-attack

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 137 பந்துகளில் அவர் 162 ரன்கள் எடுத்தார். இவரது ஆட்டம் அணியின் ஸ்கோர் உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இதற்கிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 81 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து 378 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் கலீல் அகமதின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தோல்வியடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் இந்தியா கோப்பையை வெல்லும். வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்றால் தொடர் சமன் ஆகும். ஆனால் இந்திய அணி இந்தப் போட்டியில் முழு வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது ஒரு நாள் போட்டியில் அணியில் இணைக்கப்பட்ட ஜடேஜா நாளைய அணியில் இருந்து நீக்கப்பட்டு, சாஹல் மீண்டும் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நாளை ஏராளமான மாற்றம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. திருவனந்தபுரத்தில் கட்டப்பட்டுள்ள புது மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

உத்தேச இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, கலீல் அகமது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close