[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

விராட், ரோகித் சரவெடி சதம் : கதிகலங்கியது வெஸ்ட் இண்டீஸ்

indvswi-1st-odi-virat-and-rohit-century

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும் சதம் அடித்துள்ளனர்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சந்த்ரபால் 9 (15) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கியெரன் பவெல் அரை சதம் 51 (39) அடித்து அவுட் ஆனார். 

இதையடுத்து வந்த வீரர்களில் ஷிம்ரான் நிலைத்து விளையாடி அதிரடியாக 106 (78) ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் சட்டென உயர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் சஹால் 3, முகமத் ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 323 என்ற கடினமான இலக்கை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே 4 (6) ரன்களில் விக்கெட்டை இழந்து தவான் அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்தியாவிற்கு இலக்கு கடினமாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இதையடுத்து கைகோர்த்த ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஜோடி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சிதறடித்தது. சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 88 பந்துகளில் சதம் அடித்தார். ரோகித் ஷர்மா 84 பந்துகளில் சதம் அடித்தார். இந்நிலையில் விராட் கோலி 140 (107) ஆட்டமிழந்தார். இந்திய அணி தற்போது 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓவர்களில் 256 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் ஷர்மா 107 (87) எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். அவருடன் அம்பத்தி ராயுடு இணைந்து விளையாடி வருகிறார்.

விராட் கோலி, ரோகித் சர்மா ஜோடி 5வது முறையாக 200 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close