[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

வெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கை, பிசிசிஐ ஒத்தி வைப்பு!

no-immediate-decision-on-virat-kohli-s-request-to-allow-wives-on-tours

வெளிநாட்டு தொடர் முழுவதும் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தங்க அனுமதிக்க வேண்டும் என விராத் கோலி எழுப்பியுள்ள கோரிக்கை, இப்போது பரிசீலிக்கப்படாது என தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, வீரர்கள் தங்கள் மனைவி மற்று காதலியை 2 வாரங்கள் வரை மட்டுமே தங்க தங்கவைத்துக் கொள்ளலாம் என என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தி இருந்தது.

இந்த விதியை மாற்றி, தொடர் முடிவடையும் வரை மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்க அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் கேப்டன் விராத் கோலி கோரிக்கை வைத்திருந்தார்.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘விராத் கோலி கோரிக்கை வைத்திருப்பது உண்மை தான். அதுபற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை.

(மனைவியுடன் ரோகித்)

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிட இருக்கிறோம். அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் இப்போது  மாற்றம் இல்லை’ என்றார். இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close