[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

சதத்தை அம்மாவுக்கு சமர்ப்பனம் செய்த ஜடேஜா!

jadeja-dedicates-maiden-international-ton-to-late-mother

எனது முதல் சதத்தை மறைந்த என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று ரவீந்திர ஜடேஜா கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் அதிகப்பட்ச ஸ்கோர் இது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா 134 ரன்களும், கேப்டன் விராத் கோலி 139 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 100 ரன்களும் எடுத்தனர். ஜடேஜாவுக்கு இது முதல் டெஸ்ட் சதம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டுகளும் லெவிஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.  

இந்நிலையில் முதல் சதம் அடித்த ரவீந்திர ஜடேஜா கூறும்போது, ’ சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி 9 வருடங்களுக்குப் பின் முதல் சதத்தை அடித்திருக்கிறேன். இந்த சதம், எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. இதற்கு முன்பு 80, 90 ரன்கள் வரை எடுக்கும்போது சதம் அடிக்க வேண்டும் என்று நினைப்பேன். முடியாமல் போயிருக்கிறது. இன்று அதை சாதித்து விட்டேன். முதல்தர போட்டிகளில் சதம் அடித்திருக்கிறேன். சர்வதேச போட்டியிலும் என்னால் சதம் அடிக்க முடியும் என தெரியும். அதை நினைத்தே இன்று ஆடினேன். சதத்தை எட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சதத்தை மறைந்த எனது அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது ஆட்டத்திறனை மேம்படுத்த முயற்சிக்கி றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டியில் பங்கேற்றேன். முதல் போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்தினேன். சில நேரம் சிறப்பாக பந்துவீசினாலும் விக்கெட் கிடைக்காது. இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை சிறப்பாக பயன் படுத்த வேண்டும் என்று நினைப்பேன். அப்படியே எப்போதும் ஆடி வருகிறேன்’ என்றார்
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close