[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

கருண் நாயருக்கு இடமில்லையா?: விராட் கோலி என்ன சொல்கிறார்?

virat-kohli-clarifies-on-karun-nair-s-omission-says-selection-is-not-my-job

இந்திய அணியில் கருண் நாயர் எடுக்கப்படாதது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கி அக்டோபர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கபட்டது. அதில் இளம் வீரர்களுக்கே அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மூத்த வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா, முரளி விஜய் ஆகியோர் இடம்பெறவில்லை. நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையில் லோகேஷ் ராகுல்,சத்தேஸ்வர் புஜாரா, ப்ரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின்,  ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகுர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

மூத்த வீரர்கள் இடம் பெறாதது குறித்து ஏற்கெனவே சர்ச்சை எழுந்த நிலையில் அணியில் கருண் நாயர் எடுக்கப்படாதது மேலும் சர்ச்சையாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலேயே இந்திய அணியில் கருண் நாயர் சேர்க்கப்படாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கருண் நாயர் அணியில் சேர்க்கப்படாததற்கு கங்குலி, சேவாக் உள்ளிட்டோரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். 

இந்நிலையில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி, ''தேர்வுக்குழுவினர் தங்களது வேலையைச் செய்துள்ளார்கள். இதில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. வீரர்களைத் தேர்வு செய்வது என்பது என்னடைய வேலையும் இல்லை. அனைவரும் சேர்ந்து வீரர்களைத் தேர்வு செய்வது கிடையாது. அணி என்ற முறையில் நாங்கள் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்துவருகிறோம்'' என்று தெரிவித்தார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close