[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

தவான் அதிரடியில் நொறுங்கியது ஹாங்காங்

india-vs-hong-kong-4th-match-dhawan-hits-hundred

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன.

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா 23 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிகர் தவான் மற்றும் அம்பதி ராயுடு ஜோடி நிலைத்து விளையாடியது. 60 (70) எடுத்திருந்த நிலையில், நவாஷ் வீசிய பந்தில் ராயுடு கேட்ச் அவுட் ஆனார். 

இதன்பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் உடன் இணைந்த தவான் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்துகளில் சதம் அடித்தார். இதன்பின்னர் 127 (120) எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து எம்.எஸ். தோனி களமிறங்கினார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 0 (3) ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் 33 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு, 44 ஓவர்கள் முடிவில் 253 ரன்கள் எடுத்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close