[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

முதல் மற்றும் கடைசி டெஸ்ட்டில் சதம்: இங்கி. வீரர் குக் சாதனை!

one-last-good-time-for-alastair-cook

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டைர் குக் நேற்று புதிய சாதனை படைத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்தது. பட்லர் 89, குக் 71, முகமது அலி 50 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

Read Also -> இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன் 

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 86 ரன்கள் எடுத்து இதுவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அறிமுக வீரர் விஹாரி 56 ரன்களும், கேப்டன் விராத் கோலி 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட், மொயின் அலி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து, 40 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. குக் 18, ரூட் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நான்காவது நாளான நேற்று குக், ரூட் இருவரும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். குக் நிதானமாக விளையாட, ரூட் ஒருநாள் போட்டியை போல் அடித்து விளையாடினார்.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் 210 பந்துகளிலும், ரூட் 151 பந்துகளிலும் சதம் அடித்தனர். இங்கிலாந்து அணி 321 ரன்கள் எடுத்திருந்த போது ரூட் 125 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் குக் 147 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தனர். இந்த இரண்டு விக்கெட்களையும் அறிமுக வீரர் விஹாரி கைப்பற்றினார். 

Read Also -> இங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்!  

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் சரிந்தது. ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கர்ரன் 30 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 112.3 ஓவரில் 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, விஹாரி தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

இதனையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தது. தவான் ஒரு ரன்னிலும், புஜாரா, விராத் கோலி டக் அவுட் ஆகியும் வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். கே.எல்.ராகுலும் ரஹானேவும் ஆடி வருகின்றனர். கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

Read Also -> கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்' 

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக் மேலும் ஒரு சாதனை படைத்தார். இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் குக், அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2006-ம் ஆண்டு நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான குக், 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக் காமல் 104 ரன்கள் எடுத்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமைக்குரிய குக், டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டி யலில் 5-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளார். அவர் 161 டெஸ்ட் போட்டியில் 12,472 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவின் தெண்டுல்கர் 200 டெஸ் ட்டில் 15,921 ரன்களுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் தென்னாப் பிரிக்கா வின் ஜாக் காலிஸ் 13,289 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும்  இந்தியாவின் ராகுல் டிராவிட் 13,288 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close