[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா

ravindra-jadeja-wants-to-play-all-3-formats

டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் அதிக இடைவெளி விழுந்து விடுகிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா கூறினார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது இந்திய அணி. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காத ஜடேஜா, அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நினைக்கிறே ன். டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தால் அதிக இடைவெளி விழுந்துவிடுகிறது. இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அனுபவம் குறைந்துவிடுகிறது. அதனால் மூன்றுவிதமான போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு விரைவில் அந்த இடத்துக்கு வருவேன். இந்தியாவுக்காக விளையாடுவது பெரிய விஷ யம். சில நேரம் சிறப்பாக விளையாடினால் அது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அணியின் நம்பிக்கைக் குரிய வீரராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அணியின் ஆல் ரவுண்டர் இடத்தை ஏற்கனவே நிரப்பி இருக்கிறேன். இங்கு எனக்கு எதுவும் புதிதில்லை. சரியான நேரம் அமையவேண்டும்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close