[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

“சும்மா விளையாடினால் போதாது.. முழு கிணறை தாண்டனும்” - விராட் கோலி

just-competing-not-enough-need-to-learn-art-of-crossing-the-line-virat-kohli

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 245 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணி 184 ரன்னில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி - ரகானே ஜோடி களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர் எல்லாமே மாறிவிட்டது. 22 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்து 122 ரன்கள் வரை விக்கெட் விழாமல் விராட் - ரகானே ஜோடி பார்த்துக் கொண்டது. ஆனால், விராட் ஆட்டமிழக்க அடுத்த 60 ரன்களுக்குள் ஆட்டமே முடிந்துவிட்டது. 

245 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் மீண்டும் சொதப்பினர். இந்தப் போட்டியில் தோற்றத்தால் இந்திய அணி தொடரையும் இழந்தது. 

இந்நிலையில், தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி பேசுகையில், “நாம் ஒரு சிறந்த கிரிக்கெட்டை தான் விளையாடினோம். ஆனால், திரும்ப திரும்ப ஒரே மாதிரியான காரணத்தை சொல்ல முடியாது. விளையாடினோம் என்பது அல்ல பிரச்னை. வெற்றி பெறுவதுதான் முக்கியம். 

வெற்றிக்கான இலக்கை நெருங்கும் நாம், முழுமையாக வெற்றியின் கோட்டை தாண்டும் கலை நமக்கு தெரிய வேண்டும். நம்மிடம் அந்த திறமை உள்ளது. அதனால் தான், வெற்றிக்கு மிக அருகில் நம்மால் செல்ல முடிகிறது. ஆனால், நெருக்கடி வரும் போது நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்த இடத்தில் நாம் மேலும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close