[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

தோனியின் அதிரடி முடிவும்.. விராட் கோலியின் வெற்றிப் பயணமும்

virat-kohli-breaks-sourav-ganguly-s-record-as-test-captain

2014ம் ஆண்டு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அந்தத் பயணத்தின் டெஸ்ட் தொடரில் இருந்து கேப்டன் தோனி அதிரடியாக ஓய்வு பெற்றார். அதுவரை ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவித போட்டிகளுக்கும் தோனி தான் கேப்டனாக இருந்தார். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு விராட் கோலியின் கைகளுக்கு வந்தது. தோனி எடுத்த அந்த அதிரடியான முடிவில் இருந்து தொடங்கியது தான் விராட் கோலியில் டெஸ்ட் பயணம். 

           

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் விராட் கோலி சிறப்பான பங்களிப்பை தொடக்கம் முதலே செலுத்தி வந்துள்ளார். சிலர் கேப்டன் பொறுப்பேற்ற பின்னர் சரியாக பேட்டிங் செய்ய மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால், கேப்டன் பொறுப்பேற்ற பின்னரும் தன்னுடைய அதிரடியான சதங்களை அவ்வவ்போது அவர் பதிவு செய்து கொண்டே வந்தார். பல நேரங்களில் அவர் ஒன் மேன் ஆர்மியை போல் அணியை தோளில் சுமந்து வந்தார். டெஸ்ட் போட்டியில் 6 இரட்டை சதங்கள் அடித்த ஒரே கேப்டன் கோலிதான்.

        

விராட் கோலியை பொறுத்தவரை இங்கிலாந்தில் தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டியாகும். முதல் போட்டியில் கோலி சதம் அடித்த போதும் இந்திய அணி போராடி தோற்றது. இரண்டாவது போட்டியில் கோலி உட்பட எல்லா வீரர்களும் சொதப்ப இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில்தான், மூன்றாவது போட்டியில் அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பான பங்களிப்பை செலுத்த இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

       

இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த இரண்டாவது கேப்டன் என்ற மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். 27 வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். தற்போது 22 வெற்றிகளுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்பாக 21 வெற்றிகளுடன் சவுரவ் கங்குலி உடன் சமனில் இருந்தார். தற்போது கங்குலியை பின்னுக்கு தள்ளி தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துள்ளார். தோனியின் வெற்றியை முறியடிக்க அவருக்கு இன்னும் 6 வெற்றிகளே தேவை. 

                     

ஆனால், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை விராட் கோலிதான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார். அதாவது மற்ற கேப்டன்களை காட்டிலும் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ளார். 27 போட்டிகளில் தோனி வெற்றி பெற்றிருந்தாலும் அவரது வெற்றி சதவீதம் 45 தான். கங்குலியின் வெற்றி சதவீதம் 42.85 தான். ஆனால், விராட் கோலியின் வெற்றி சதவீதம் 57.89 ஆகும்.

தோனி      - 45 சதவீதம்

கோலி      - 57.89 சதவீதம்

கங்குலி     - 42.85 சதவீதம்

அசாருதீன்  - 29.78 சதவீதம்

       

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை உடன் இரண்டு முறை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் ஒரு முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close